இந்தியா, மார்ச் 26 -- மார்ச் 25 ம் தேதி அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த நிலையில், மார்ச் 27 ம் தேதியான நாளை, அமித்ஷாவை சந்திக்க தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மார்ச் 25 ம் தேதி திடீரென டெல்லி சென்ற, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அன்று இரவு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அவருடைய இல்லத்தில் சந்தித்தார். சுமார் இரண்டு மணி நேரம் நடந்த அந்த சந்திப்பில், மீண்டும் அதிமுக-பாஜக கூட்டணி குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | எடப்பாடி சந்திப்பு முடிந்ததும் அமித்ஷா போட்ட 'தமிழ்' பதிவு.. அதிமுக-பாஜக கூட்டணி உறுதியா?

2026 சட்டமன்ற தேர்தலில் என்டிஏ கூட்டணியில் அதிமுக இணைவது குறித்த அந்த பேச்சு ...