இந்தியா, மார்ச் 7 -- ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலத்தில் ஒட்டப்பட்ட வரவேற்பு போஸ்டரில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பதிலாக நடிகர் சந்தான பாரதியின் படம் இருந்த சம்பவத்தின் பின்னணியில் திமுகவினர் உள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலத்தில் அமைந்து உள்ள மத்திய தொழிற் பாதுகாப்பு படை பயிற்சி மையத்தின் 56வது ஆண்டு விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். சி.ஆர்.எஃப் வீரர்கள் அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக் கொண்ட அவர், பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்ததுடன், மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் 'சென்டினல்' இதழை அவர் வெளியிட்டார்.

அமித்ஷாவை வரவேற்று ராணிப்பேட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் அருள்மொழி சார்பில் போ...