இந்தியா, மார்ச் 26 -- நடிகர் மோகன்லால் நடிப்பில் நாளை வெளிவரவிருக்கும் எல் 2: எம்புரான் படத்தின் டிரெய்லரை அமிதாப் பச்சனுக்கு அனுப்பியதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நியூஸ் 18 க்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், "எல் 2: எம்புரான் படத்தின் டிரெய்லரைப் பார்த்தபோது ரஜினிகாந்த் எவ்வாறு எதிர்வினையாற்றினார் என்பதையும் பகிர்ந்து கொண்டார். மேலும் படத்தின் டிரெய்லரை நடிகர்கள் "உண்மையிலேயே பாராட்டினர்" என்று அவர் கூறினார். இது குறித்து விரிவாக காண்போம்.

மலையாள நடிகர் மோகன்லால் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து இருக்கும் திரைப்படம் எல் 2: எம்புரான், இப்படத்தினை நடிகர் பிருத்திவிராஜ் சுகுமாரன் இயக்கியுள்ளார். கேரள அரசியலில் தொடங்கி உலக அரசியல் வரை இருக்கும் கதையை மையக்கருவாக இப்படம் கொண்டுள்ளது. இப்படத்தில் மோகன்லால் உடன் டோவினோ தாம...