இந்தியா, ஏப்ரல் 17 -- விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே இரண்டாவது திருமணம் செய்திருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்களை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். இந்தத்திருமணத்தில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டிருக்கின்றனர். பிரியங்காவின் கணவர் பெயர் வசி என்று சொல்லப்படுகிறது.

முன்னதாக பிரியங்கா பிரவீன் குமார் என்பவரை கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 2022ம் ஆண்டு விவாகரத்து பெற்றுக்கொண்டனர். தற்போது திருமணம் செய்து கொண்டிருக்கும் வசி என்பவர் டிஜேவாகவும், தொழிலதிபராகவும் இருக்கிறார்.

மேலும் படிக்க | Priyanka deshpande: 'அவதான் என்னோட முதல் குழந்தை.. அவளுக்காக எது வேணும்னாலும்..' -பிரியங்கா எமோஷனல்!

இ...