இந்தியா, ஜூலை 11 -- பிரபல நடிகையான ஸ்ருதிஹாசன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வருகிற ஆகஸ்ட் 14 அன்று வெளியாக உள்ள கூலி படத்தில் இணைந்து நடித்திருக்கிறார்.

இந்த நிலையில் அவர் கூலி படத்தில் ரஜினிகாந்துடன் பணிபுரிந்தது குறித்து பேசி இருக்கிறார். இது குறித்து ரன்வீர் அலகாபாடியா யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் ' "ரஜினிகாந்தும் எனது தந்தையும் (கமல்ஹாசனும்) தமிழ் சினிமாவின் இரண்டு தூண்கள் மற்றும் முகங்கள்.

நான் அவரைச் சுற்றியே வளர்ந்திருப்பேன் என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், நானும் அவரை மக்கள் பார்க்கும் அதே லென்ஸ் வழியாகதான் அறிந்திருந்தேன். நான் அவரை சூப்பர் ஸ்டாராக அறிந்திருந்தேன். என் அப்பாவின் லென்ஸிலிருந்து அவரைப் பற்றித் தெரிந்துகொண்டேன்.

ஆனால், படப்பிடிப்புத்தளத்தில் தொழில் ரீதியாக அவரை அறிந்து கொள்வது...