இந்தியா, பிப்ரவரி 23 -- நடிகர் பாண்டியனின் மகன் பேட்டி: மண்வாசனை, ஆண் பாவம், கிழக்குச்சீமையிலே ஆகியப் படங்களில் நடித்து பெரியளவில் அதிர்வான ஹீரோவாக வலம் வந்தவர், நடிகர் பாண்டியன். 2008ஆம் ஆண்டு உயிரிழந்த அவருக்கு ரகு என்ற மகன் இருக்கிறார்.

இந்நிலையில் ரகு பாண்டியன் பிஹைண்ட்வுட்ஸ் யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டி, 2025ஆம் ஆண்டு, பிப்ரவரி 16ஆம் தேதி வெளியானது. அவற்றின் தொகுப்பினைக் காணலாம்.

அப்பா பாண்டியன் மதுரை ஜெயராஜ் நாடார் ஸ்கூலில் 10ஆவது வரை படிச்சார். அந்த ஸ்கூலில் இவர் வந்து பெரிய சண்டியர் மாதிரி இருந்திருக்கார். ஒரு புரூஸ்லி மாதிரி இருந்தார். துறுதுறுன்னு இருந்திருக்கார். அதற்கப்புறம் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வளையல் வியாபாரம் பார்த்திட்டு இருந்தார். வார கலெக்‌ஷனுக்கு அப்பா போகும்போது, பாரதிராஜா சார் மீனாட்சி அம்மன் கோயிலுக்க...