இந்தியா, மே 13 -- நடிகர் விஜய்க்கு மெமரி அதிகம் என இயக்குநர் விக்ரமன் பேசியிருக்கிறார்.

இதுதொடர்பாக பிஹைண்வுட்ஸ் மேக்ஸ் யூடியூபில், ஜூன் 22, 2022அன்று வெளியான பேட்டியில் இயக்குநர் விக்ரமன் கூறியிப்பதாவது, '' நடிகர் விஜய்யுடைய திறமை எனக்கு முதல் நாளே தெரிஞ்சிருச்சு. படமெடுக்கும்போதே, நிறையபேர் கிட்ட சொன்னேன், அடுத்து மிகப்பெரிய சூப்பர் ஸ்டாராக வரப்போகிறார் என்று.

இன்றைக்கு வேண்டுமென்றால், சிலர் சொல்லலாம். அவர் பயிற்சி எடுக்காமல் வந்தார் என்று. நான் ஒத்துக்கமாட்டேன். அவர் பக்காவாக, பயிற்சி எடுத்து வந்தார்.

தனது சிறுவயதில் இருந்தே, தன்னை தயார்ப்படுத்திக்கிட்டு, சினிமாவுக்குத் தான் வரப்போகிறேன். இது நம்ம எதிர்காலம் என நினைத்து , நல்லா டான்ஸ் கத்துக்கிட்டு, நல்லா பைட் கத்துக்கிட்டு, நல்லா குதிரை ஏற்றம் கத்துக்கிட்டு, எல்லாமே கத்துக்கிட்ட ஒர...