இந்தியா, ஏப்ரல் 17 -- விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே நேற்றைய தினம் டி ஜே வசி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்தத்திருமணத்தில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

அவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வரும் நிலையில், கடந்த வருடம் எஸ்.எஸ். யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தன்னுடைய இரண்டாவது கணவர் எப்படி அமைய வேண்டும் என்பது குறித்து பேசி இருந்தார். அந்த பேட்டியை இங்கே நினைவு கூறலாம்.

இது குறித்து அவர் பேசியதாவது, ' அன்பு எப்போதும் ஜெயிக்கும். யார் என்ன சொன்னாலும் பராவாயில்லை. எனக்கு வருபவர் என்னை காதல் செய்தால் மட்டும் போதும், உங்களுக்கு என்ன வேண்டுமோ அவையனைத்தையும் நான் தருகிறேன். என்னை அப்படியே காதல் செய்ய வேண்டும். பாசமாக பார்த்துக்கொள்ள வேண்டும். அந்த அன்பு எ...