சென்னை,புது டெல்லி, ஏப்ரல் 29 -- பத்மபூஷன் விருதுபெற்ற நடிகர் அஜித்குமாருக்கு அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இன்று டெல்லியில் நடந்த பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் பத்மபூஷன் விருதை அஜித் வாங்கியதைத் தொடர்ந்து, தன்னுடைய எக்ஸ் தளத்தில் தன்னுடைய வாழ்த்துச் செய்தியை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி. அவர் அதில் கூறியிருப்பதாவது:

''தன் திரைத் துறை சாதனைகளுக்காக இந்திய அரசின் உயரிய விருதுகளுள் ஒன்றான பத்மபூஷன் விருது பெற்றுள்ள அன்புச் சகோதரர் திரு. அஜித்குமார் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்,''

என்று எடப்பாடி பழனிசாமி தன்னுடைய எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதே நடிகர் அஜித்குமாருக்கு பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கல...