இந்தியா, மே 11 -- பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தின் சார்பில் மாமல்லபுரம் அருகில் திருவிடந்தையில் 'சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு', ஏறத்தாழ 4 மணியளவில் தொடங்கியது.

கிட்டத்தட்ட 12ஆண்டுகளுக்குப் பின் இந்த மாநாடு நடப்பதால் லட்சக்கணக்கான வன்னியர் மக்கள் விழா அரங்கில் ஒன்று கூடி இருக்கின்றனர்.

பாமக சித்திரை முழு நிலவு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

இந்தியாவில் 1931ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும்போதிலும், தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள 69% இடஒதுக்கீட்டைப் பாதுகாப்பதற்கும், மிகமிக பின்தங்கிய நிலையில் உள்ள சமூகங்களுக்கு உள்இடஒதுக்கீடு வழங்குவதற்கும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் மூலம் பெறப்படும் தரவுகள் போதும...