இந்தியா, மார்ச் 11 -- லிடியன் நாதஸ்வரத்திடம் இளையராஜா சிம்பொனி இசையை எழுத சொன்னதாக தகவல் வெளியான நிலையில், அதற்கு இளையராஜா விளக்கம் கொடுத்து, வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அந்த வீடியோவில் அவர், 'ஒரு முறை லிடியன் நாதஸ்வரம் என்னிடம் பாடம் கற்றுக் கொள்வதற்காக வந்திருந்தான். அப்போது அவன், நானும் ஒரு சிம்பொனி இசையை உருவாக்கி இருக்கிறேன் என்று அவன் ப்ரோகிராம் செய்த சிம்பொனி இசையை என்னிடம் போட்டுக் காண்பித்தான்.

மேலும் படிக்க | Ilaiyaraaja Symphoney: லண்டனில் பொழிந்த இசை மழை.. இளையராஜாவின் சிம்பொனியை ரசித்த மக்கள்.. வைரலாகும் வீடியோக்கள்..

அந்த இசையை கேட்ட சில நொடிகளிலேயே அதனை நான் நிறுத்த சொல்லி விட்டேன்; அத்துடன் அவனிடம், இது சிம்பொனி இசை இல்லை. முதலில் சிம்போனி இசை என்றால் என்ன என்பதை கற்றுக் கொண்டு, அதன் பின்னர் சிம்பொனி இசையை உருவ...