இந்தியா, ஏப்ரல் 27 -- அதிமுக-பாஜக கூட்டணியால் திமுகவுக்கு பயம் ஏற்பட்டுள்ளதாகவும், 2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைக்கும் எனவும் எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் அம்மா பேரவைச் செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார். அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அம்மா பேரவை ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசினார்.

மேலும் படிக்க:- 'மத்திய அரசு பணிகளில் சேருவோருக்கு தமிழக அரசே முட்டுக்கட்டைப் போடுவதா?' விளாசும் அன்புமணி ராமதாஸ்!

ஆர்.பி.உதயகுமார், முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக-பாஜக கூட்டணி குறித்து கேள்வி எழுப்பியதை விமர்சித்தார். "பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தால் புண்ணியம், அதிமுக வைத்தால் பாவமா? நீட் தேர்வு ரத்து குறித்து பாஜகவிடம் கேட்க முடியுமா என முதல்வர் கேட்கிறார். இது அவருக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தை காட்டுகிறத...