ஊட்டி,நீலகிரி,சென்னை,சேலம், ஏப்ரல் 6 -- ஊட்டில் அதிமுக குறித்து முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் செய்ததற்கு, அதிமுக ஐடி விங் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிலடி தரப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளது இதோ:

'அஇஅதிமுக யாருடன் கூட்டணி செல்லவேண்டும், என்ன கோரிக்கை வைக்க வேண்டும் என்பதில் திமுக தலைவராக இருக்கக் கூடிய ஸ்டாலினுக்கு என்ன இவ்வளவு அக்கறை? ஆடு நனைகிறதே என இந்த ஓநாய் அழுவது ஏன்?

மேலும் படிக்க | Modi About DMK: 'இவ்வளவு பணம் கொடுத்தும் இன்னும் அழுகிறார்கள்!' திமுகவை விளாசிய மோடி!

முதலில், மாநில உரிமைகளைப் பற்றி பேச ஸ்டாலினுக்கோ, திமுகவுக்கோ கொஞ்சமாவது மனசாட்சி இருக்கிறதா? இந்தியா கூட்டணியின் முதல் கூட்டத்திற்கு பாட்னா சென்ற போது மாநில உரிமைகள் பற்றி ஏதாவது பேசினாரா? அல்லது, இரண்டாவது கூட்டத்திற்காக பெங்களுரு சென்றாரே- அப்போது காவிர...