இந்தியா, மார்ச் 30 -- "நான் டெல்லியில் பேசும்போது தொண்டனாக பணியாற்றவும் தயார் என்ற வார்த்தையை பயன்படுத்தி உள்ளேன். அதன் பொருளையும் நன்றாக உணர்ந்து கொள்ளுங்கள்" என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.

கோயம்புத்தூர் விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கூட்டணி விவகாரம், தமிழக அரசியல் நிலைமை, மக்களின் கருத்து மற்றும் கட்சியின் இலக்குகள் குறித்து விவரித்தார். கூட்டணி குறித்து பேச விரும்பவில்லை என்றும், தமிழ்நாடு பாஜக தொண்டர்கள் கருத்தை மாநில தலைவராக பிரதிபளித்து உள்ளேன். அது கட்சியின் தேசிய தலைவர்களான ஜே.பி. நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் அமைப்பு பொதுச்செயலாளர் சந்தோஷ் ஆகியோரின் முடிவுக்கு உட்பட்டது என்றும் தெரிவித்தார்.

சமீபத்தில் வெளியான 'சி வோட்டர்' கருத்துக்கண...