காட்டு மன்னார் கோவில், ஜூலை 16 -- மக்களைக் காப்போம் தமிழ்கத்தை மீட்போம் எழுச்சிப் பயணத்தில் ஒரு கட்டமாக இன்று சிதம்பரத்தில் பல்வேறு விவசாய சங்கப் பிரதிநிதிகளை, அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசினார். விவசாயிகள் கூறிய கருத்துகள், கோக்கைகளைப் பரிசீலித்து அதிமுக ஆட்சி அமைந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ், ''ஏற்கனவே அம்மா அவர்கள் வருவாய்த் துறையில் ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தார்கள். அதில் ஸ்டிக்கர் ஒட்டி 46 திட்டங்களகை் குறிப்பிட்டு முதல்வர் விளம்பரம் செய்கிறார். மக்களுக்கு எவ்வளவோ பிரச்னைகள் இருக்கிறது, இதையெல்லாம் நான்காண்டுகளாக ஏன் சரி செய்யவில்லை..?

ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நேரத்தில் கிராம் கிராமமாகச் சென்று மக்க...