இந்தியா, ஏப்ரல் 22 -- அதிமுக எம்.எல்.ஏக்கள் டாஸ்மாக் முறைகேடு குறித்து பேசுவது பயமாக உள்ளதா என சபாநாயகருக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் இன்று நடைபெறுகிறது.

இதில் டாஸ்மாக் முறைகேடு குறித்து அதிமுக எம்எல்ஏக்களுக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி "என்ன பயமா?" என சபாநாயகரை கேள்வி எழுப்பினார். டாஸ்மாக் முறைகேடு விவகாரம் குறித்து விவாதிக்க அதிமுக உறுப்பினர்கள் முயன்றபோது, ஈ.பி.எஸ். பேச முயல, அவரது மைக் ஆஃப் செய்யப்பட்டது. மேலும் பேச சபாநாயகர் அனுமதி மறுத்ததாக அதிமுகவினர் குற்றம்சாட்டி உள்ளனர்.

இதனால் அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர்....