இந்தியா, மார்ச் 17 -- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (17.3.2025) சட்டமன்றப் பேரவையில், அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்டு வந்த சட்டப்பேரவைத் தலைவர் அவர்களை பதவியிலிருந்து நீக்கக் கோரும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது ஆற்றிய உரை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அப்போது உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின்,

''மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே!

அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்களால் அப்பாவு அவர்களை பேரவைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கக்கோரும் தீர்மானம் பற்றிபேசிக்கொண்டிருக்கிறோம்.

மக்கள் நம்பிக்கையை இழந்தவர்களால் இப்படி ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டிருப்பதைப் பார்த்து மக்களே நகைப்பார்கள் என்பது தான் உண்மை.

கடந்த 2017-ஆம் ஆண்டு, இதேபோன்ற ஒருதீர்மானம் வந்தது.

"தமிழக சட்டமன்ற வரலாறு நூற்றாண்டு விழாவினை இன்னும் நான்கு ஆண்டுகளில் காண...