மதுரை,சோழவந்தான்,உசிலம்பட்டி, செப்டம்பர் 4 -- மதுரை சோழவந்தான் தொகுதியில் மக்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அடுத்தபடியாக உசிலம்பட்டி தொகுதியில் டி.விளக்கு பகுதியில் காத்திருந்த மக்கள் மத்தியில் எழுச்சியுரையாற்றினார்.

"உசிலம்பட்டி வேளாண் மக்களும், விவசாயத் தொழிலாளர்களும் நிறைந்த பகுதி. நானும் விவசாயியாக இருந்தவன். உங்களிடம் பேசுகின்ற வாய்ப்புக் கிடைத்திருக்கிறது என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அதிமுக ஆட்சியில் விவசாயிகள் நிறைய திட்டம் கொடுத்தோம். 40 ஆண்டுகால கோரிக்கையான 58ம் கால்வாயில் அம்மா ஆட்சியில் தண்ணீர் விட்டு சோதனை செய்தோம். 4 முறை அதிமுக ஆட்சியில் தண்ணீர் விடப்பட்டது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் 58ம் கால்வாயில் நீர் விடுவோம். வைகை அணை தூர் வாரவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

நீர் மேலாண்மை அமைப்பை ஏற்படுத்தி...