காரைக்குடி,சிவகங்கை,சென்னை,சேலம், ஏப்ரல் 3 -- காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப சிதம்பரம், பிஃகைண்ட்உட்ஸ் சேனலில், பத்திரிக்கையாளர் மணிக்கு நேர்காணல் கொடுத்துள்ளார். அதில் திமுக-அதிமுகவின் பலம் என்ன என்பதை கூறியுள்ளார். அவர் பேசியவை இதோ:

''தமிழக காங்கிரஸ் கட்சிக்கு எதிர்காலம் பயங்கர சவாலாக இருக்கும். களத்தில் கூட்டம் அதிகரித்துவிட்டது. ஏற்கனவே இரு திராவிட கட்சிகள் பலமாக உள்ளனர். திமுகவில் தொண்டர் ரீதியாக அடிப்படை கட்டமைப்பு பலமாக உள்ளது. கட்சிக்கான கட்டமைப்பும் உள்ளது. அடுத்த தலைமுறைக்கான தலைவரையும் அவர்கள் அறிமுகம் செய்துவிட்டார்கள். அது தேர்தலில் ஜெயிக்கிறது, தோற்கிறது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால், அந்த கட்சி அடுத்த 25 ஆண்டுகளுக்கு எதுவும் ஆகாது. அடுத்த தலைமுறை தலைவரையும் திமுகவில் ஏற்றுக் கொண...