இந்தியா, மார்ச் 17 -- அதிமுகவில் ஒற்றுமையோடு தான் இருக்கிறோம் என்றும்; அதிமுக உடைபடும் என நினைப்பவர்கள் மூக்கு உடைந்து போனார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில், சட்டப்பேரவைத் தலைவரும் சபாநாயகருமான அப்பாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா வாக்கு எடுப்புக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறுகையில், '' தமிழக சட்டப்பேரவையில் சட்டப்பேரவைத் தலைவர் பதவி நீக்கத் தீர்மானத்தை அதிமுக சார்பில் கொண்டுவரப்பட்டு, அதன்பேரில் வாக்கு எடுப்பு முடிந்திருக்கிறது.

இவ்விவகாரத்தில் கலந்துகொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகையில், எதிர்க்கட்சித் தலைவர் ஆளுநர் உரையில் 2 மணி நேரம் 52 நிமிடங்கள் பேசினார் எனக் குறிப்பிட்டார். அதேபோல், நாங்கள் பேசுவதற்கு எந்தவொரு தடையும் இல்லை என்று சொல்லியிருக்கிறா...