இந்தியா, மார்ச் 29 -- பாஜக விதிக்கும் நிபந்தனைகளுக்கு எடப்பாடி பழனிசாமி முரண்டுபிடித்தால் செங்கோட்டையனை கட்சித் தலைமை பதவிக்கு கொண்டு வர பாஜக திட்டமிட்டுள்ளதாக மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் தெரிவித்து உள்ளார்.

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் ரகசிய டெல்லி பயணம் குறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பாஜக-அதிமுக உறவில் நடக்கும் அரசியல் நகர்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

"மார்ச் 28 காலை மதுரையிலிருந்து விமானம் மூலம் டெல்லி சென்ற செங்கோட்டையன், அன்று இரவு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார். இந்த சந்திப்பில் தமிழ்நாடு பாஜக சட்டமன்றத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் உடனிருந்தனர். சந்திப்பு முடிந்து, மறுநாள் (மார்ச் 29) காலை 5 மணி விமானத்தில் மதுரை திரும்பிய செங்கோட்டையன், காலை 8...