இந்தியா, மார்ச் 21 -- 'அதிமுகவுக்கான கூட்டல், கழித்தலை சாணக்கியத்தனத்துடன் எங்கோ இருப்போர் போடுகிறார்கள்' என அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியது பேரவையில் சிரிப்பலையை ஏற்பத்தியது

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025-26ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மீதான பதிலுரையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அளித்தார்.

அப்போது அவர் பேசுகையில், நேற்றைய தினம் அதிமுக உறுப்பினர் தங்கமணி பேசும்போது, "அடுத்த 2ஆண்டுகளில் 20 லட்சம் மாணவர்களுக்கு கைக்கணினி அல்லது மடிக்கணினி வழங்கப்படும் என்று சொல்லி உள்ளீர்கள். அதற்காக 2 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளீர்கள் இதை வைத்து கணக்கு போட்டால் ஒரு லேப்டாபிற்கு 10 ஆயிரம் ரூபாய்தான் வருகிறது. 10 ஆயிரம் ரூபாயில் எத்தகைய தரமான மடிக்கணியை வழங்க முடியும்" என்று ஒரு மனக்கணக்கை போட்டு பேசினார்.

இத்திட்டம் அறிவிக்கும் போது, அடுத்த 2 ஆண...