இந்தியா, பிப்ரவரி 27 -- அதிமுக அரசின் மருத்துவத்துறை சாதனைகளுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்வதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் குற்றம்சாட்டி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஊரில் கல்யாணம் மார்பில் சந்தனம்' என்று கிராமப்புறங்களில் மைனர்கள் சுற்றித் திரிவதுபோல், விதிவசத்தால் தமிழகத்தின் முதலமைச்சராகிய திரு. ஸ்டாலின், அரசு நிகழ்ச்சிகளில் மார்தட்டிக்கொண்டு அலைகிறார். மருத்துவத் துறையில் சிறப்பான கட்டமைப்புகளை உருவாக்கி, தமிழகம் முன்னோடியாக இருப்பதற்கு, ஏதோ இவரது தந்தை திரு. கருணாநிதி செய்த சாதனைகள்தான் காரணம் என்று, நேற்றைய மருத்துவத் துறை தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். அதனால்தான் மருத்துவ வளர்ச்சி ஏற்பட்டது என்று, தமிழக மக்களுக்கு ஒன்றும் தெரியாதென்று நினைத்து முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்...