சென்னை,காரைக்குடி,சிவகங்கை, ஏப்ரல் 3 -- காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரும், முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரம், பிகைஃன்ட்உட்ஸ் யூடியூட் சேனலில், ஊடகவியலாளர் மணி எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்திருக்கிறார். சுவாஸ்யமான அந்த பேட்டியில், தமிழகத்தின் காங்கிரஸ் கட்சியின் நிலையை விமர்சித்துள்ளார். இதோ அவருடைய அந்த பேட்டி:

''நான் தமிழக காங்கிரஸ் தலைவராக ஆக வேண்டும் என்பதை விட, காங்கிரஸ் தமிழகத்தில் வலுவான கட்சியாக இருக்க வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை. இன்றைய சூழலில், நடைமுறையாக, எதார்த்தமாக, மிகைப்படுத்தாமல், நேர்மையாக கூற வேண்டுமானால் 5 அல்லது 6வது இடத்தில் தான் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி இருக்கிறது. 2014க்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் ஓட்டு என்ன என்பதை சோதனை செய்யவே இல்லை. அந்த அ...