இந்தியா, மார்ச் 23 -- பாஜகவின் தனக்கு விரைவில் முக்கிய பதவி கிடைக்கும் என காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய விஜயதாரணி தெரிவித்து உள்ளார்.

காங்கிரஸ் கட்சி சார்பில் விளவங்கோடு தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த விஜயதாரணி, கடந்த 2024 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தார். அவருக்கு கன்னியாகுமரி எம்பி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. பாஜகவில் இதுவரை ஏதும் முக்கிய பொறுப்புகள் வழங்கப்படாத நிலையில், தனியார் யூடியுப் சேனல் ஒன்றுக்கு அவர் நேர்காணல் அளித்து உள்ளார்.

"இரண்டு முறை சட்டமன்ற கட்சித் தலைவர் பதவியை கேட்டு இருந்தேன். 2016ல் மூத்த எம்எல்ஏ ஒருவருக்கு பதவி கொடுக்க வேண்டும் என்று சொன்னதை நான் ஏற்றுக்கொண்டேன். ஆனால் 202...