Chennai, ஏப்ரல் 30 -- அண்ணன் சண்முகத்தை மீறி சௌந்தரபாண்டி வீட்டிற்குக் கிளம்பிச் சென்ற இசக்கி அம்மாள் பற்றியும் அதற்கான காரணம் என்ன என்பது பற்றியும் அண்ணா சீரியல் இன்றைய எபிசோடில் பார்க்கலாம்.

தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல், அண்ணா.

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், சீரியலின் நாயகனான சண்முகம், சீரியலின் நாயகியான மனைவி பரணிக்கு சப்போர்ட் செய்து பேசி, ரத்னாவை திட்டிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாருங்கள்.

அதாவது, ரத்னா அண்ணன் தன்னை திட்டுவதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். சண்முகம்,' பரணி எல்லாம் உன் நல்லதுக்காக தான் பண்ணி இருக்கா' என்று பேசுகிறான்.

அதைத்தொடர்ந்து ரூமுக்கு வந்த பரணி, 'என்ன புதுசா எனக்கு சப்போர்ட்...