இந்தியா, மே 10 -- சென்னையில் அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துகளை தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவித்துக் கொண்டார்கள்.

அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வரக்கூடிய மே 12ஆம் தேதி தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அதனை ஒட்டி, தமிழகத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் மூத்த உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, முன்கூட்டியே பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

மேலும் படிக்க: 'இலாகாவை அடுத்து கட்சி பதவியையும் இழக்கிறாரா துரைமுருகன்?' பொதுச்செயலாளர் பதவிக்கு ஆபத்தா?

இந்தச் சந்திப்பில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவர் நயினார் நாகேந்திரன், பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத்தலைவர் தமிழிசை செளந்தரராஜன...