இந்தியா, மார்ச் 22 -- அட்லீயின் புதிய படத்தில் அல்லு அர்ஜூன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா 2 படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தெலுங்கு இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா 2 படம், இந்திய அளவில் முதல்நாளில் மட்டும் ரூ.175.1 கோடியை வசூலித்தது. அதேபோல், இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்த அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் ஜோடி, படத்தில் அனைவரின் இதயத்தையும் வென்றது.

தென்னிந்தியா மட்டுமின்றி இந்தி மொழியிலும் இப்படம் பெரும் வசூலை ஈட்டியது. குறிப்பாக, உலகம் முழுக்க இப்படம் 1642 கோடி ரூபாய் வசூலித்து மிகப்பெரிய பிளாக் பஸ்டர் படமாக ஆனது. இந்நிலையில் தற்போது அல்லு அர்ஜுன் பற்றி ஒரு பெரிய செய்தி வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தமிழ்...