இந்தியா, ஏப்ரல் 30 -- பாகிஸ்தான் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அட்டவுல்லா தரார் புதன்கிழமை இரவு செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், பாகிஸ்தான் மீது அடுத்த 24-36 மணி நேரத்திற்குள் இந்தியா இராணுவத் தாக்குதல் நடத்தலாம் என்று "நம்பகமான ஆதாரங்கள்" இருப்பதாகக் கூறினார்.

"பஹல்காம் சம்பவத்தில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி, அடுத்த 24-36 மணி நேரத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா இராணுவ நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது என்று நம்பகமான உளவுத்துறை தகவல்கள் கிடைத்துள்ளன" என்று தரார் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், பாகிஸ்தான் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடு என்றும், ஆனால் அனைத்து வகையான வன்முறையையும் கண்டித்துள்ளது. இருப்பினும், ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று நடந்த பயங்க...