இந்தியா, மார்ச் 1 -- பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள மண்டலங்களின் எண்ணிக்கை 15இல் இருந்து 20ஆக உயர்ந்து உள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டு உள்ள செய்திக் குறிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சியின் தற்போதைய மண்டலங்களின் நிர்வாகப் பகுதிகளை சீரமைத்து மண்டலங்களின் எண்ணிக்கையை 15-லிருந்து, 20-ஆக உயர்த்தி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள். 2011 ஆம் ஆண்டு பெருநகர சென்னை மாநகராட்சியுடன் 42 உள்ளாட்சி அமைப்புகள் இணைக்கப்பட்டு, 426 சதுர கிலோ மீட்டர் பரப்புடன் அதன் எல்லைகள் விரிவாக்கம் செய்யப்பட்டன. பெருநகர சென்னை மாநகராட்சியின் மக்கள்தொகை 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 66.72 இலட்சம் மற்றும் தற்போதைய மக்கள்தொகை சுமார் 85 இலட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியானது, தற்போது 15 மண்டலங்களில் 200 வார்ட...