Chennai, ஏப்ரல் 24 -- பால் விற்பனை விலையை லிட்டருக்கு 4.00 ரூபாய் குறைத்த முன்னணி தனியார் பால் நிறுவனம் போன்று, மற்ற தனியார் நிறுவனங்களும் பால் விற்பனை விலையை குறைக்க முன் வர வேண்டும் என பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவன மாநிலத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி கூறுகையில், ''தென்னிந்தியாவின் முன்னணி தனியார் பால் நிறுவனமான ஹட்சன் நிறுவனம் கடந்த மார்ச் 14ம் தேதி ஆரோக்யா பால் விற்பனை விலையை லிட்டருக்கு 4.00 ரூபாயும், தயிர் விற்பனை விலையை லிட்டருக்கு 3.00 ரூபாயும் தன்னிச்சையாக உயர்த்திய நிலையில் அந்நிறுவனத்தை பின்பற்றி தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த அனைத்து தனியார் பால் நிறுவனங்களும் பால், தயிர் விற்பனை விற்பனை விலை உயர்வை உடனடியாக அமுல்படுத்தின. இருப்ப...