இந்தியா, ஏப்ரல் 16 -- நடிகர் எஸ்.ஜே. சூர்யா தான் இத்தனை நாட்களாக திருமணம் செய்யாமல் இருப்பதன் காரணம் குறித்தும், நடிகர் அஜித் கொடுத்த வாய்ப்பால் தான் இந்த நிலையில் இருக்கிறேன் எனவும் பிஹைண்ட் வுட்ஸ் சேனல் மேடையில் பேசியிருக்கிறார்.

இதுதொடர்பாக பிஹைண்ட்வுட்ஸ் டிவி யூடியூப் சேனலில் ஏப்ரல் 15ஆம் தேதி பிரபல தொகுப்பாளர் கோபிநாத்தின் கேள்விகளுக்கு எஸ்.ஜே.சூர்யா அளித்த பதில்களுடைய தொகுப்பு கீழே தரப்பட்டுள்ளது.

ஆமா(சிரிக்கிறார்). இவ்வளவு பெரிய சுதந்திரத்தை காத்து வைச்சிருக்கிறது எவ்வளவு பெரிய விஷயம்.

அப்படி இல்லை. அடைய வேண்டிய உயரத்தை இன்னும் அடையவில்லை. அதனால் அந்த நினைப்பு வராமல் இருக்கலாம்.

அது ரொம்பப் பெரிய இடம். சொன்னால், காமெடியாகத்தான் இருக்கும். விருப்பத்தைச் சொல்வது தப்பில்லை. நான் நினைக்கிறது நடக்கலாம்; நடக்காமலும் போகலாம். நடந்தாலு...