இந்தியா, மே 28 -- கொண்டைக்கடலை என்பது, பேபேசி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பயிர், குறிப்பாக இது இந்தியாவிலும், பிற ஆசிய நாடுகளிலும் அதிகம் பயிரிடப்படுகிறது. இது அவித்து, சுண்டி, அல்லது கறியாக்கி சாப்பிடலாம். கொண்டைக்கடலையில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. நோயெதிர்ப்பு சக்தி மற்றும் ஆற்றலை அதிகரிக்கும். கொண்டைக்கடலையில் மாங்கனீசு, தையமின், மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற பல கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை உடலின் ஆற்றலை அதிகரிக்கதோடு, நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். நாமும் அடிக்கடி சமையலில் கொண்டைக்கடலையை சேர்த்து சாப்பிடுவது வழக்கம். சுண்டல் குழம்பு, மசாலா கறி போன்றவை செய்வது வழக்கம். காலையில் சத்தான மற்றும் சுவையான உணவினை சாப்பிட வேண்டும் என நினைக்கிறீர்களா? இந்த சுண்டல் தோசை சிறந்த தேர்வாக இருக்கும். இன்றே இதனை செய்து பார்த்து அசத்து...