இந்தியா, ஜூன் 2 -- தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் இளையராஜா. 80-90 களின் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில், பல படங்களுக்கு இசையமைத்து பல ஹிட் பாடல்களை கொடுத்த இவர், தனது 82வது பிறந்தநாளை அவரது ரசிகர்களுடன் கொண்டாடி வருகிறார்.

மேலும் படிக்க| தமிழ் திரையுலகிற்கு மீண்டும் ஓர் பேரதிர்ச்சி.. பேருந்து பயணத்திலேயே பறிபோன இயக்குநர் விக்ரம் சுகுமாரனின் உயிர்!

1976-ம் ஆண்டு வெளியான அன்னக்கிளி என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். பின், மக்களோடு மக்களாக அவரின் இசை கலக்கத் தொடங்கி மக்கள் மனங்களில் மிகவும் நெருக்கமான இசையமைப்பாளராக மாறினார் இளையராஜா. இசையமைக்க வந்த 3 ஆண்டுகளிலேயே 100 படங்களுக்கு இசையமைத்து அனைவரின் வாயிலும் விரலை வைக்க தொடங்கினார். பின், அவரது சாதனையை அவரே முறியடித்து அடுத்த இரண்டு ஆண்டுகளில் அடுத்த 100 ...