இந்தியா, மார்ச் 23 -- கர்நாடக மாநிலம் ஆனேக்கல் தாலுகாவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கோயில் ஹஸ்கூர் மத்துரம்மா. இந்த கோயிலின் ரத நிகழ்ச்சி நேற்று மார்ச் 22 ஆம் தேதி சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் யாரும் எதிர்பாராத வகையிலான ஒரு பெரிய சோகம் ஏற்பட்டதில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்த கோயிலில் ஆண்டு தோறும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் பெருவிழா நடைபெற்று ரதங்கள் இழுத்துச் செல்லப்படும். இந்த தேர்கள் கண்கவரும் வகையில் சுமார் 20 தளங்களுடன் 120 அடி உயரத்திற்கு அமைக்கப்பட்டிருக்கும். இதனை பார்க்கவே ஏராளமான மக்கள் பல்வேறு இடங்களில் இருந்தும் வருவர்.

மேலும் படிக்க: தஞ்சை தேர் விபத்து.. கூடுதல் நிவாரணம் வழங்க ஓ.பன்னீர் செல்வம் அறிவுறுத்தல்

அப்படி இந்த ஆண்டு நடைபெற்ற மத்தரம்மா கோயில் தேரைக் காண பல இடங...