இந்தியா, மார்ச் 14 -- தமிழ் சினிமா திரைத்துறையை பொறுத்தவரை ஒவ்வொரு வாரமும் குறிப்பாக வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் பல்வேறு திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. இந்த மாதம் முதல் வாரத்தில் ஜி.வி. பிரகாஷின் 'கிங்ஸ்டன்', விமலின் 'படவா', யோகி பாபு நடிப்பில் 'லெக் பீஸ்' உள்பட சில படங்கள் வெளியாகி இருந்தது. அந்தவகையில், இன்று (வெள்ளிக்கிழமை) மார்ச் 14 ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படங்கள் குறித்த சுவாரஸ்ய தகவலை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

ஸ்வைத் எஸ்.சுகுமார் எழுதி இயக்கி உள்ள காதல் நகைச்சுவைத் திரைப்படம் 'ஸ்வீட்ஹார்ட்'. இதில் ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ளது மட்டுமின்றி அவரே இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் ஒளிப்பதிவு பாலாஜி சுப்பிர...