ஜம்மு,காஷ்மீர்,புது டெல்லி, ஏப்ரல் 29 -- பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் அரசு உஷார் நிலையில் உள்ளது. யூனியன் பிரதேசத்தில் பாதிக்கும் மேற்பட்ட சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல பயங்கரவாத தாக்குதல்கள் நடப்பதாக கிடைத்த தகவலை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏப்ரல் 22 அன்று, பஹல்காமின் பைசரனில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.
மேலும் படிக்க | மும்பை பயங்கரவாதத் தாக்குதல் வழக்கு: தஹாவூர் ராணாவுக்கு மேலும் 12 நாள் என்ஐஏ காவல்.. நீதிபதி உத்தரவு
இந்தியா டுடே அறிக்கையின்படி, 87 சுற்றுலா தலங்களில் 48 இடங்களை மூட அரசாங்கம் முடிவு செய்துள்ளது. பள்ளத்தாக்கில் மேலும் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படலாம் ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.