இந்தியா, மார்ச் 19 -- ஒவ்வொரு நாளும் நமது வாழ்க்கையை உற்சாகமாக மாற்றும் ஒரு சிறப்பு பானம் தான் டீ, உலக அளவில் மிகவும் பிரபலமான ஒரு பானமாக இருந்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் வாழும் ஒவ்வொரு மக்களும் அவர்களது காலை வேளையை சூடான டீயுடன் தான் தொடங்குகிறார்கள். அந்த அளவிற்கு டீ நமது வாழ்வில் முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. இத்தகைய டீயில் பல வகைகள் உள்ளன. பிளாக் டீ, லெமன் டீ, இஞ்சி டீ என அத்தனை டீகளும் குடிப்பதற்கு மிகவும் சுவையாகவும் நமக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையிலும் இருக்கின்றது. எல்லா டீ வகைகளிலும் சிறப்பான டீயாகவும் அதிக சுவையிடனும் இருக்கும் ஒரு டீ தான் மசாலா டீ, பொதுவாக நாம் மசாலா டீ கடைகளில் சென்று குடித்திருக்கிறோம். ஆனால் வீட்டில் மசாலா அடி போடுவது என்பது சிலருக்கு தெரியாமல் இருக்கலாம். இனி அது குறித்து கவலைப்பட வேண்டாம். வ...