இந்தியா, ஜூலை 25 -- 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' எழுச்சிப்பயணம் மேற்கொள்ளும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று புதுக்கோட்டையில் 'திமுகவின் உருட்டுகளும் திருட்டுகளும் - உண்மைக்காக உரிமைக்காக' என்ற அதிமுகவின் புதிய பிரச்சார திட்டத்தைத் தொடங்கி வைத்தார். முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையில், 'உருட்டுகளும் திருட்டுகளும் துரோகம் மாடல்' என்ற ஏஐ வீடியோவும் வெளியிடப்பட்டது.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி. ''2021 சட்டமன்றத் தேர்தலின்போது திமுக சார்பில் 525 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள், திமுக ஆட்சியில் அந்த அறிவிப்புகளில் 99 சதவீதம் நிறைவேற்றப்பட்டதாகக் கூறிவருகிறார்கள்.

அவர்கள் தேர்தலின்போது வெளியிட்ட 10 அறிவிப்புகளை நாம் ஒரு தாளில் கொடுத்தி...