இந்தியா, பிப்ரவரி 21 -- இயக்குநர் ஷங்கர்: தனது சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறையின் நடவடிக்கை வருத்தம் அளிக்கிறது என இயக்குநர் ஷங்கர் குற்றம்சாட்டியிருக்கிறார்.

தமிழ்நாட்டின் உச்ச நடிகர் ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோர் இணைந்து நடித்த எந்திரன் படத்தினை இயக்கிய இயக்குநர் எஸ். ஷங்கரின் ரூ.10.11 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை தற்காலிகமாகப் பறிமுதல் செய்துள்ளது.

இந்த நடவடிக்கை தொடர்பாக, எந்திரன் (ரோபோ) திரைப்படத்தின் கதை ஆரூர் தமிழ்நாடன் எழுதிய 'ஜிகுபா' என்ற கதையிலிருந்து நகலெடுக்கப்பட்டது என்று அமலாக்கத்துறை இயக்குநர் ஷங்கர் மீது குற்றம்சாட்டியிருக்கிறது. இதனால், காப்புரிமைச் சட்டத்தின் பிரிவு 63-ஐ-ன் படி, இயக்குநர் ஷங்கர் அதனை மீறியதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

இதன்மூலம், 2002ஆம் ஆண்டு PML...