திருவனந்தபுரம்,புதுச்சேரி, மே 23 -- நடிகை ஷகிலா கவர்ச்சிப் படங்களில் நடித்துப் பிரபலமானவர். அவரது திரைப்படங்கள், குறிப்பாக மலையாளத் திரையுலகில், பெரும் வசூல் சாதனைகளைப் படைத்தன. ஒரு காலகட்டத்தில், பிரபல மலையாள நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் போன்றோரின் படங்களைக் காட்டிலும் ஷகிலா நடித்த படங்கள் அதிக வசூல் ஈட்டிய சம்பவங்கள் உண்டு என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஷகிலா படங்கள் வெளியாகும் போது, முன்னணி நடிகர்களின் படங்கள் கூட திரையரங்குகள் கிடைக்காமல் வெளியீட்டைத் தள்ளிப்போட வேண்டிய நிலை இருந்தது.

மேலும் படிக்க | 'அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்தப்ப ஷகிலாதான் எல்லாமே செஞ்சாங்க.. அவ்வளவு தானம் தர்மம் பண்றாங்க' -ஷர்மிளா பேட்டி!

ஷகிலா நடித்த திரைப்படங்களில் "கின்னாரத்தும்பிகள்" (Kinnara Thumbikal) மிகப்பெரிய வணிக வெற்றியைப் பெற்றது. இந்த மலையாளத்...