இந்தியா, மே 1 -- ஹீரோ நானியின் படங்கள் டோலிவுட்டில் புதுமையும், பன்முகத்தன்மையும் கொண்டவையாக பார்க்கப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட இமேஜ் வட்டத்திற்குள் சிக்காமல், புதிய கதை களங்களை நோக்கி ஓடுவது நானியின் ஸ்டைல். அவரது நடிப்பில் இன்றைய தினம் வெளியாகி இருக்கும் திரைப்படம் ஹிட் 3 .இந்த படத்தை ஷைலேஷ் கோலா இயக்கி இருக்கிறார். ஹீரோயினாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கிறார். படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

அர்ஜுன் சர்க்கார் (நானி) ஒரு போலீஸ் அதிகாரி, அவர் ஆந்திராவுக்கு எஸ்.பி.யாக மாற்றப்படுகிறார். அவருக்கு நேர்மையும் கோபமும் அதிகம். சமூகத்தில் ஒரு குற்றவாளி கூட இருக்கக்கூடாது என்பது அவரது கோட்பாடு.

அர்ஜுன் சர்காரின் அதிரடி நடவடிக்கைக்கு அதிகாரிகள் மற்றும் மக்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்புகிறது. ஆனால் அர்ஜுன் அவர்களை கண்டுகொள்ளாமல் தனது...