இந்தியா, ஜூன் 1 -- மீடு விவகாரத்தில் வைரமுத்துவிற்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைத்த சின்மயி தென்னிந்திய திரைப்பட, தொலைக்காட்சி கலைஞர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் அவரால் தமிழில் வேலை செய்ய முடியாத சூழ்நிலை உருவானது.இதற்கிடையில் சில இயக்குநர்கள் தடையை மீறி தங்களுடைய படத்தில் அவரை பேசவும், பாடவும் வைத்தனர். இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பின.

தடை நீக்குவது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அண்மையில் தக் லைஃப் ஆடியோ வெளியீட்டு விழாவில் சின்மயி பாடிய முத்தமழை பாடல் ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகிறது. தமிழில் இந்தப்பாடலை தீ பாடியிருக்கும் நிலையில் அன்றைய தினம் அவர் வரமுடியாத காரணத்தால் சின்மயி மேடையில் பாடலை பாடியிருந்தார். இந்த நிலையில் இந்த வரவேற்பு கு...