இந்தியா, ஏப்ரல் 21 -- வைட்டமின் பி 12 (கோபாலமைன்) இது உங்கள் மூளை மற்றும் நரம்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. இது ரத்த சிவப்பணுக்கள் மற்றும் டிஎன்ஏ உற்பத்தியை அதிகரிக்கிறது. இது ஆற்றல் வளர்சிதைக்கும் உதவுகிறது. இது குறைந்தால் உங்களுக்கு வாந்தி, மயக்கம், நினைவாற்றல் தொல்லைகள், மனநிலையில் மாற்றம், மரத்துப்போதல் மற்றும் அனீமியா ஆகியவை ஏற்படும். இது கர்ப்பிணிகளுக்கு மிகவும் தேவையான உணவாகும். இது வயோதிகர்கள் மற்றும் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்சுவதில் பிரச்னை உள்ளவர்களுக்கும் மிகவும் தேவையான ஒன்றாகும்.

தினமும் எவ்வளவு வைட்டமின் பி 12 உங்கள் உடலுக்கு தேவையென்நால் அது வயதைப் பொறுத்து மாறுபடும். பெரும்பாலும் வயோதிகர்களுக்கு 2.4 மைக்ரோகிராம் வைட்டமின் பி 12 தேவை. கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டு தாயமார்களுக்கு கொஞ்சம் கூடுதலான 2.6 முதல் 2....