இந்தியா, ஏப்ரல் 19 -- உங்கள் உடலில் வைட்டமின் பி 12 குறைந்தால் என்னவாகும் என்று பாருங்கள். இதை பெரும்பாலானவர்கள் தவிர்ப்பார்கள். வைட்டமின் பி 12 அல்லது கோபாலமின் என்பது நீரில் கரையக்கூடிய வைட்டமின் சத்து ஆகும். மேலும் இது உடலுக்கு மிகவும் முக்கியமான சத்தும் ஆகும். உங்கள் உடலில் ஆற்றலை உற்பத்தி செய்ய இந்தச் சத்துக்கள் மிகவும் முக்கியமானவையாகும். எனினும், இந்த ஊட்டச்சத்தின் எண்ணற்ற குணங்கள் குறித்து பேசப்படுவதில்லை. இதை யாரும் பெரிதாகவும் எடுத்துக்கொள்வதில்லை.

நரம்பு ஆரோக்கியத்துக்கு வைட்டமின் பி 12 மிகவும் முக்கியமான சத்து ஆகும். இது குறையும்போது, அது உங்கள் நரம்புகளை சேதப்படுத்தும். உங்கள் உடலில் ஊசி வைத்து குத்துவதுபோல் இருக்கும். மரத்துப்போன உணர்வு ஏற்படும். கை-கால்கள் அடிக்கடி மரத்துப்போவது இந்த சத்துக்களின் குறைபாட்டால்தான். இதற்கு ந...