இந்தியா, மார்ச் 31 -- உங்கள் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் ஆற்றலுக்கு வைட்டமின் கே முக்கிய பங்கு வகிக்கிறது. இது உங்களின் நினைவாற்றலை அதிகரிக்கவும், உங்கள் ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது. இது குறையும்போது ஈறுகளில் பிரச்னைகள், எலும்பு ஆரோக்கிய குறைபாடு ஏற்படுகிறது. அதை தடுக்க நீங்கள் சாப்பிட வேண்டிய வைட்டமின் கே சத்துக்கள் நிறைந்த உணவுகள் என்னவென்று பாருங்கள். வைட்டமின் கேயில் ப்ரோத்ரோபின் உள்ளது. அது ரத்தம் உறைவதைத் தடுக்கிறது. ரத்தத்தில் கால்சியத்தின் அளவை முறைப்படுத்துகிறது. இது வயோதிகர்களுக்கு நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது. இது தமனிகளில் மினரலைசேஷன் நடப்பதை தடுத்து ரத்த அழுத்தத்துக்கு நன்மை கொடுக்கிறது. வைட்டமின் கே குறையும்போதுதான் ஈறுகளில் ரத்த கசிவு ஏற்படுகிறது. எலும்பு புரை ஏற்படுகிறது. எனவே அதைத் தடுக்க...