இந்தியா, மார்ச் 15 -- தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர் பொது பட்ஜெட் உடன் நேற்று தொடங்கியது. திமுக அரசு பொறுப்பேற்ற பின் 4ஆவது நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இன்றைய தினம் வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். முன்னதாக முன்னாள் முதலமைச்சர்கள் பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களுக்கு சென்று மரியாதையும் செலுத்தினார்.

பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்அலகுடை நீழ லவர்.

பல அரசுகளின் நிழல்களைத் தமது குடைநிழலின் கீழ் கொண்டு வரும் வலிமை பெற்றவர்கள் உழவர்கள் என்று உழவர்கள் பெருமையை ஐயன் திருவள்ளூவர் கூறி உள்ளார். உழவர்கள் பாதுகாக்கப்பட்டால், அவர்கள் அனைத்து மக்களையும் காப்பார்கள் என புறநானூறு கூறுகிறது.

காளை மா...