இந்தியா, மார்ச் 15 -- 2,500 ஏக்கரில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி மிளகாய் சாகுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். விருதுநகர், இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அறிவித்து உள்ளார்.

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர் பொது பட்ஜெட் உடன் நேற்று தொடங்கியது. திமுக அரசு பொறுப்பேற்ற பின் 4ஆவது நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இன்றைய தினம் வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். முன்னதாக முன்னாள் முதலமைச்சர்கள் பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களுக்கு சென்று மரியாதையும் செலுத்தினார்.

Published by HT Digital Content Services with permiss...