இந்தியா, மார்ச் 15 -- நல்லூர் வரகு, வேதாரண்யம் முல்லை, நத்தம் புளி, ஆயக்குடி கொய்யா உள்ளிட்ட 5 வேளாண் விளை பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர் பொது பட்ஜெட் உடன் நேற்று தொடங்கியது. திமுக அரசு பொறுப்பேற்ற பின் 4ஆவது நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இன்றைய தினம் வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். முன்னதாக முன்னாள் முதலமைச்சர்கள் பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களுக்கு சென்று மரியாதையும் செலுத்தினார்.

தமிழ்நாட்டில் இயங்கிவரும் 284 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில், 157 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள...