திருச்சி,மதுரை,விருதுநகர்,ராமநாதபுரம்,தர்மபுரி,சென்னை, மார்ச் 9 -- தமிழ்நாடு வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் சேர்க்க வேண்டிய அம்சங்கள் மற்றும் திட்டங்கள் குறித்து முன்மொழிவுகளை காவிரி வைகை கிருதுமால் குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் எம். அர்ச்சுணன் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

''மண்ணைப் பொன்னாக்கும் விவசாயிகள் வருமானத்தை அதிகரித்து அவர்கள் வாழ்க்கையை மேம்படுத்த வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை என்று கூறி கடந்த நான்கு ஆண்டுகளாக தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. வேளாண்மை தனி நிதிநிலை அறிக்கையினால் தமிழ்நாட்டு விவசாயிகள் வாழ்வில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் நிகழ்ந்து விடவில்லை. வேளாண்மை தனி நிதிநிலை அறிக்கை இன்று தமிழ்நாட்டு விவசாயிகள் சந்திக்கும் அடிப்படை பிரச்சினைகளையோ அன்றாட பிரச...